Show all

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியில் அபார வெற்றி பெற்றது இந்தியா

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது T20 போட்டி ஆக்லாந்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக கிரான்ட்ஹோம் 50 ரன்களும், ரோஸ் டெய்லர் 42 ரன்களும் குவித்தனர். இந்திய அணியில் குருணால் பாண்ட்யா 3 விக்கெட்டுகளையும், கலீல் அகமது 2 விக்கெட்டுகளையும், புவனேஷ் மற்றும் ஹர்திக் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

இதையடுத்து, 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் அனைவருமே சிறப்பாக விளையாடினர். இந்திய அணி 18.5 ஒவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் குவித்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரிஷப் பாண்ட் 40 ரன்களுடனும் டோனி 20 ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். மேலும் கேப்டன் ரோகித் சர்மா 50 ரன்களும், ஷிகர் தவான் 30 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் 1-1 என சம நிலையில் உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.