Show all

விநாயகரின் படம் பதித்த காலணிகள் வெளியீடு! ஹவாயைச் சேர்ந்த மயூ வோக் நிறுவனம் சிக்கியுள்ளது சர்ச்சையில்

16,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வடஇந்தியாவில் பிரபலமாக வணங்கப் படுகிற தெய்வமான விநாயகரின் படம் பதித்த காலணிகளை ஹவாயை சேர்ந்த மயூ வோக் நிறுவனம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளது.

மயூ வோக் ஹவாயில் மிகப்பெரிய ஆடை நிறுவனம் ஆகும். ஆண்கள் மற்றும் பெண்கள் ஆடைகள், வித்தியாசமான உபகரணங்கள், காலணிகளை இந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. வெளிநாடுகளிலும் இதற்கு நிறைய வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். 

இந்த நிலையில் இந்த நிறுவனம், வட இந்தியரின் விருப்ப தெய்வமான விநாயகரின் படம் பதித்த காலணிகளை வெளியிட்டுள்ளது. இதன் விலை 3000 ரூபாயில் இருந்து 6000 ரூபாய் வரை இருக்கும் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல் பெண்களின் லெக்கிங்ஸ் போன்ற ஆடைகளிலும் விநாயகர் உருவம் பதித்து வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த புகைப்படங்கள் இணையம் முழுக்க வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஹிந்துத்துவா அமைப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். மயூ வோக் நிறுவனம் இதற்கு உடனடியாக மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்றும், உடனடியாக தாங்கள் வெளியிட்ட காலணிகளை திரும்ப பெற வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,018.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.