Show all

டாஸ்மாக் குடிப்பகங்களில் நாளை முதல் நுழைவு கட்டணம்! நெகிழிப் பொருட்கள் தடை எதிரொலி

16,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அரசு அனுமதி பெற்ற குடிப்பகங்கள் 2 ஆயிரம் அளவிலும், அரசு அனுமதி பெறாத குடிப்பகங்கள் சுமார் 3 ஆயிரம் எண்ணிக்கையிலும் இயங்கி வருவதாக கூறப்படுகிறது.

இதுவரை இந்த குடிப்பகங்களில் குடிக்க வரும் மதுப்பிரியர்களுக்கு நெகிழி குவளை, தண்ணீர் பொட்டலம் ஆகியவை விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இந்த 2 பொருட்களும் அரசு தடை செய்த பொருட்கள் பட்டியலில் வருவதால்,  நாளை முதல் இதை விற்பனை செய்ய முடியாது. இதனால், குடிப்பக உரிமையாளர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், அண்மையில் மாவட்ட வாரியாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தலைமையில் குடிப்பக உரிமையாளர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நெகழிப் பொருட்கள் தடை குறித்து எடுத்துக்கூறப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து, டாஸ்மாக் குடிப்பகங்களில் நாளை முதல் நுழைவுக் கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என்று வாய்மொழி உத்தரவு ஒன்றை டாஸ்மாக் அதிகாரிகள் பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. 

எனவே, நாளை முதல் டாஸ்மாக் குடிப்பகங்களில் 10 ரூபாய் முதல் 20  ரூபாய் வரை நுழைவு கட்டணமாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுப்பிரியர்களுக்கு கண்ணாடிக் குவளை, தண்ணீர் புட்டியும்; வழங்கப்பட இருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,018.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.