Show all

சசிகலா சார்பில் மனு! சிறையில் உள்ள தன்னை, அணியமாக வேண்டும் என்ற எழும்பூர் அறங்கூற்றுமன்றத்தின் தீர்ப்பை, ரத்து செய்ய வேண்டி

24,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தனியார் தொலைக்காட்சிக்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்களை வாங்கியதில் முறைகேடு எனவும் சசிகலா உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  அந்நிய செலாவணி தடுப்பு சட்டத்தின் கீழ் 4 வழக்குகளை அமலாக்கத்துறை தொடுத்திருந்தது.

ஆவணங்களை முறையாக பதிகை செய்யவில்லை எனவும், விசாரணைக்கும் கூட அணியமாகவில்லை எனவும் கூறப்பட்டது. இந்நிலையில்,  பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவை வரும் வியாழக்கிழமை நேரில் அணியமாக வேண்டும் என  எழும்பூர் அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது. 

இதை எதிர்த்து சசிகலா சார்பில் உயர் அறங்கூற்றுமன்றத்தில் மனுபதிகை செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்அறங்கூற்றுமன்றம்  சசிகலா அணியமாக வேண்டும் என்ற எழும்பூர் அறங்கூற்றுமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து உள்ளது. காணொளிக் காட்சி மூலம் விசாரணைக்கு அணியமாக வேண்டும் என்று உயர்அறங்கூற்றுமன்றம் உத்தரவு பிறப்பித்தது. சசிகலா பாஸ்கரன் உள்ளிட்ட 4 பேர் மீது போடப் பட்டுள்ள அந்நிய செலாவணி வழக்கை 4 மாதத்தில் முடிக்கவும்  உயர் அறங்கூற்றுமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

அரசு ஊழியர்கள் பற்றி ஒரு கதையுண்டு: சாலையோரம் ஒரு அரசு ஊழியர் குழி தோண்டிக்; கொண்டே சென்றாராம். சிறிது நேரத்திற்குப் பிறகு இன்னொரு அரசு ஊழியர் அந்தக் குழியை மூடிக் கொண்டே சென்றாராம். சாலையில் சென்ற ஒரு வழிப்போக்கருக்கு இது வியப்பை அளித்தது. ஒரு அரசு ஊழியர் ஏன் குழி தோண்ட வேண்டும், இன்னொரு அரசு ஊழியர் அதை ஏன் மூட வேண்டும் என்;ற கேள்வி அவருக்கு எழ, குழியை முடிக் கொண்டு போகிற அரசு ஊழியரிடம் ஏன் இப்படியென்று கேட்டே விட்டார். அவர் சொன்னாராம் அவருக்கு குழி தோண்டுகிற வேலை. எனக்கு குழியை மூடுகிற வேலை. இடையில் குழியில் செடி வைக்க வேண்டியவர்தான் இன்று வரவில்லையே விடுப்பு எடுத்துக் கொண்டாரே என்றாராம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,997.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.