Show all

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பரபரப்பான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற  ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, தவான் ஆகியோர் இறங்கினர். ஆனால் அதிர்ச்சி தொடக்கமாக ரோகித் சர்மா ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து தவான் 21 ரன்னிலும், அம்பதி ராயுடு 18 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து சிறப்பாக விளையாடிய விஜய் சங்கர் 46 ரன் எடுத்து எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். அடுத்து கேதர் ஜாதவ் 11 ரன்னிலும், டோனி ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தாலும், கோலி தனது 40வது சதத்தை அடித்தார். அவர் 116 ரன்களில் வெளியேறினார். இறுதியில், இந்தியா 48.2 ஓவரில் 250 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும்,  சாம்பா 2 விக்கெட்டுகளையும், நாதன் கோல்டெர், நாதன் லயன் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். 

இதையடுத்து, 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடினாலும் சீரான இடாலிவெளியில் விக்கெட் விழுந்ததால், இறுதியில் ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவரில் 242 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் இந்தியா அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சர்வதேச போட்டிகளில் இந்தியாவின் 500வது வெற்றி இதுவாகும்.  இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், பும்ராமற்றும் விஜய் சங்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா மற்றும் ஜாதவ் தல ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.