Show all

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செரீனா அதிர்ச்சி தோல்வி

அமெரிக்க கிராண்ட்ஸ்லாம் ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று பெண்களுக்கான அரையிறுதி ஒன்றில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ்- இத்தாலியின் வின்சி ஆகியோர் மோதினார்கள்.

10-ந்தேதி நடக்க வேண்டிய ஆட்டம் மழையின் காரணமாக நேற்றைக்கு (11-ந்தேதி) தள்ளி வைக்கப்பட்டது. நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் செரீனா அனுபவம் இல்லாத 42-வது இடத்தில் இருக்கும் இத்தாலியின் வின்சி (32)யை எதிர்கொண்டார்.

இதில் முதல் செட்டை 6-2 என செரீனா எளிதாக கைப்பற்றினார்.இந்த ஆட்டத்தில் 2-வது செட்டை வின்சி 6-4 எனக் கைப்பற்றினார். இதனால் வெற்றியை நிர்ணயிக்கும் 3-வது செட்டை கைப்பற்றுவது யார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதில் செரீனாவை விட வின்சி ஆக்ரோஷமாக விளையாடி 3-வது செட்டை 6-4 எனக் கைப்பற்றி முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இதனால் செரீனாவின் சாதனைக் கனவு கலைந்தது. இதற்கு முன் ஸ்டெபி கிராப் 1988-ம் ஆண்டு நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வென்றிருந்தார். அதன்பின் 27 வருடங்களாக அந்த சாதனையை எந்த வீராங்கனையாலும் தொடமுடியவில்லை.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.