Show all

டி-20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை

சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர; விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டி-20 கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலை கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

இதன்படி இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி 861 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார;

ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச் 854 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு சறுக்கியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டி-20 போட்டியில் ஆரோன் பின்ச்சுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

இதனால் அவர் 17 புள்ளிகளை இழக்க நேரிட்டது. இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் 3-ஆவது இடத்திலும், பாஃப் டுபிளெஸ்ஸிஸ் (தென் ஆப்பிரிக்கா), கிறிஸ் கெய்ல் (மே.இ.தீவுகள்) ஆகியோர் முறையே 4 மற்றும் 5-ஆவது இடத்தில் உள்ளனர்.

இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி 33-ஆவது இடத்தில் உள்ளார்.

இஷாந்த்-18: டெஸ்ட் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர்களான சேத்தேஸ்வர் புஜாரா (20-ஆவது இடம்), ரோஹித் சர்மா (48), ரவிச்சந்திரன் அஸ்வின் (50), அமித் மிஸ்ரா (91) ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

இலங்கையின் மேத்யூஸ் 5-ஆவது இடத்தில் நீடிக்கிறார்.

டெஸ்ட் போட்டி பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் இஷாந்த் சர்மா 18-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இலங்கையின் தம்மிகா பிரசாத் (18), நுவன் பிரதீப் (57), மேத்யூஸ் (71) ஆகியோரும் முன்னேற்றம் கண்டுள்ளனர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.