Show all

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் T20 யில் இந்தியா பரிதாபமாக தோற்றது

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்தியா 199 ரன் குவித்தும் தோல்வியை தழுவியது.

முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன் எடுத்தது. தொடக்க வீரர் ரோகித்சர்மா அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 66 பந்தில் 106 ரன்னும், (12 பவுண்டரி, 5 சிக்சர்), வீராட்கோலி 27 பந்தில் 43 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.

பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 2 பந்து எஞ்சி இருந்த நிலையில் 3 விக்கெட் இழப்பிற்கு 200 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டுமினி 34 பந்தில் 68 ரன்னும் (1பவுண்டரி, 7 சிக்சர்), டிவில்லியாஸ் 32 பந்தில் 51 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்கர்) எடுத்தனர். ஆட்ட நாயகனாக டுமினி தேர்வு செய்யப்பட்டார். 

நடுவர்களின் சில முடிவுகள் தென் ஆப்பிரிக்காவுக்கு சாதகமாக அமைந்து இருக்கா விட்டால் நாங்கள் அந்த அணிக்கு நெருக்கடி கொடுத்து இருப்போம். டுமினிக்கு அவுட் கொடுக்காதது துரதிருஷ்டவசமானது. சில முடிவுகள் எங்களுக்கு பாதகமாகி விட்டது. இதனால் ஆட்டம் மாறிவிட்டது. என்று  போட்டிக்கு பிறகு டோனி கூறினார்.

இந்த வெற்றி மூலம் 3 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1–0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2–வது ஆட்டம் வருகிற 5–ந் தேதி (திங்கட்கிழமை) கட்டாக்கில் நடக்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.