Show all

விஜயதாரணி உட்பட 2 எம்எல்ஏக்களுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சிகள், பேரவை வாயிலில் மறியலில் ஈடுபட முயன்ற போது காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி உட்பட 2 எம்எல்ஏக்களுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

சாலை மறியலைத் தடுக்க பேரவையின் தடுப்புக் கம்பியை இறக்கியபோது எம்எல்ஏக்கள் அண்ணாதுரை, விஜயதாரணி தலையில் தடுப்புக் கம்பி இடித்தது. இதில் இருவருக்கும் தலையில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆவேசம் அடைந்ததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. அங்கிருந்த காவல்துறையினர், எம்எல்ஏக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.