Show all

இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் பெயர் காந்தி - நெல்சன் மண்டேலா

இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்கள் அனைத்துக்கும் இனி மகாத்மா காந்தி - நெல்சன் மண்டேலா என பெயர் சூட்டப்படும் என்று இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பிசிசிஐ), தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அமைப்பும் (சிஎஸ்ஏ) தெரிவித்துள்ளன.

அந்தத் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் கோப்பைக்கு "சுதந்திரக் கோப்பை' எனவும் பெயரிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ தலைவர் ஜக்மோகன் டால்மியா தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

விடுதலைப் போராட்டம்தான் இந்தியா - தென் ஆப்பிரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான பொதுவான உறவுப் பாலமாக விளங்குகிறது.

மகாத்மா காந்தியும், நெல்சன் மண்டேலாவும், ஆயுதமின்றி அஹிம்சை வழியில் நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்தவர்கள். இந்த உலகுக்கே அவர்கள் முன்மாதிரியாக விளங்குகின்றனர். எனவே, இந்திய-தென் ஆப்பிரிக்க டெஸ்ட் கிரிக்கெட் தொடரையும், கோப்பையையும் அவர்களுக்கு நாங்கள் அர்ப்பணிக்கிறோம் என்றார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.