Show all

அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு விடைபெற்றார் கௌதம் கம்பீர்

இந்திய அணியின் துவக்க வீரராக இருந்த கௌதம் கம்பீர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக சமூக வலைத்தளம் மூலம் அறிவித்துள்ளார். கௌதம் கம்பீர் 2003-ம் ஆண்டு ஏப்ரல்11-ம் தேதி டாக்காவில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். இந்திய அணிக்காக 13 ஆண்டுகள் விளையாடியுள்ள கௌதம் கம்பீர் இதுவரை 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4,154 ரன்களும்(9 சதங்கள், 22 அரை சதங்கள்), 147 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5,238 ரன்களும் (11 சதங்கள், 34 அரை சதங்கள்) மற்றும் 37 டி20 போட்டிகளில் விளையாடி 932 ரன்களும் (7 அரை சதங்கள் ) குவித்துளார்.

கௌதம் கம்பீர், 2016-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக ராஜ்கோட்டில் நவம்பர் 9-ம் தேதி நடந்த டெஸ்ட் போட்டியில் கடைசியாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின் இந்திய அணியில் இருந்து முற்றிலும் ஓரம் கட்டப்பட்டார்.ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்று அந்த அணிக்கு 2 முறை சாம்பியன் பட்டத்தை கம்பீர் பெற்றுக்கொடுத்தார். கடைசியாக டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்தார்.

வீரேந்திர சேவாக் மற்றும் கௌதம் கம்பீர்  இருவரும் ஒரு காலத்தில் மிகச்சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களாக வலம்வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியா உலக கோப்பையை வென்ற T20 மற்றும் ஒரு நாள் போட்டி என இரண்டு போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை இவர் வெளிப்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.