Show all

.மினி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றது வங்கதேச அணி தகுதி இழந்தது வெஸ்ட் இண்டீ

மினி உலகக் கோப்பை தொடருக்கு வங்கதேசம் அணி தகுதி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி முதன் முறையாக தகுதியை இழந்துள்ளது. 2017ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள மினி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இந்த ஆண்டு செப்டம்பர் 30 ம் தேதிவரையிலான சர்வதேச தரவரிசைப்பட்டியலில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் இடம் பெறவில்லை. இதற்கு பதிலாக வங்கதேச அணி சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

2006-க்குப் பிறகு அந்த அணி இப்போதுதான் தகுதி பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான், இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரை வங்கதேச அணி வென்றதன் மூலம் அந்த அணி 7வது இடத்தை பிடித்தது.

பாகிஸ்தான் அணி 8வது இடத்தை பிடித்து கடைசி அணியாக தகுதி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன. 2017 ம் ஆண்டு ஜூன் 1 ம் தேதி முதல் முதல் 18 வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.