Show all

வெற்றிப் பயணத்தை தொடங்கியது சென்னையின் எஃப்சி

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் கோவாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 9-ஆவது லீக் ஆட்டத்தில் எஃப்சி கோவா - சென்னையின் எஃப்சி அணிகள் மோதின. கடந்த இரு போட்டிகளில் சென்னை அணி தோல்வியைத் தழுவியது   குறிப்பிடத்தக்கது.

கோவா அணியின் வீரர்களில் எந்த விதமாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் சென்னை அணியில் 4 வீரர்கள் மாற்றப்பட்டனர். ஜெயேஷ் ரானே, ரஃபேல் அகஸ்டோ, மெஹர்ஜுதீன், மெயில்சன் ஆல்வ்ஸ் ஆகியோருக்குப் பதிலாக மேனுலி பிளாசி, அபிஷேக் தாஸ், பல்வந்த் சிங், அலெஸ்சான்ட்ரே பொடென்ஜா ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

சென்னை அணிக்கு மெண்டோஜா (10, 63, 75-ஆவது நிமிடங்கள்) ஹாட்ரிக் கோல் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தார். அவர் தவிர கேப்டன் இலானோ புளூமர் 43-ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க, முடிவில் 4-0 என்ற கணக்கில் சென்னை அணி, அபார வெற்றி பெற்றது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.