Show all

தோல்விக்காக டோனியை குறை கூறக்கூடாது: சுனில் கவாஸ்கர்

கான்பூரில் நேற்று  நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி கண்டது. இப்போட்டியில் தோனி கடைசி ஓவர் வரை களத்தில் நின்றதால் இந்திய அணியை எப்படியும் வெற்றி பெற வைத்து விடுவார் என்று ரசிகர்கள் எதிபார்த்த நிலையில், 31 ரன்னில் வெளியேறி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். போட்டியை வெற்றிகரமாக முடிப்பதில் வல்லவர் என்ற பெயர் பெற்ற தோனி, ஏமாற்றியதையடுத்து அவர் மீது கடும் விமர்சனம் எழுந்தது. அத்துடன் டோனியை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற எதிர்ப்பு குரலும் ஒலிக்க ஆரம்பித்து இருக்கிறது.

இது குறித்து முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறியதாவது:இந்திய அணிக்காக கேப்டன் டோனி நீண்டகாலமாக சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். ஒருநாள் சரியாக செயல்படவில்லை என்பதற்காக அவர் மீது குற்றம்சாட்டி பலிகடா ஆக்க முயற்சிப்பது சரியானது கிடையாது. ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கக்கூடிய இந்திய வீரர்களில் டோனி தான் இன்னும் முதலிடத்தில் இருக்கிறார். வயதானால் எல்லோருக்கும் சக்தி சற்று குறைய தான் செய்யும். இது விளையாட்டுக்கு மட்டுமல்ல எல்லா தொழில்களுக்கும் பொருந்தும். இந்திய அணியின் பந்து வீச்சு சரியாக இல்லாதது தான் அணியின் தோல்விக்கு காரணம். பந்து வீச்சில் நமது அணி முன்னேற்றம் காண வேண்டியது அவசியமாகும்.இவ்வாறு கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.