Show all

இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ்

இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் உள்ள பிளெஷ்ஷிங் மெடோஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், ரஷ்யாவின் டியாட்சென்கோ, நடப்பு சாம்பியன் செரீனாவுடன் மோதினார் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய செரீனா வில்லியம்ஸ், முதல் செட்டை 6-0 என கைப்பற்றினார்.

இரண்டாவது செட்டிலும் செரீனா 2-0 என முன்னிலை பெற்றிருந்தபோது, திடீரென டியாட்சென்கோ காயம் அடைந்தார், அப்பொழுது காயம் காரணமாக தாம் விலகுவதாக அறிவித்தார். இந்த சுற்றில் செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்றதாக நடுவர் அறிவித்தார். இந்நிலையில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.