Show all

தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக கருத்து கணிப்பு

தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக மக்கள் ஆய்வக இயக்குனர் தலைமையில்  கருத்துக் கணிப்பு ஒன்று நடத்தபட்டது. தமிழகத்தின் 28 மாவட்டங்களில் 80 சட்டசபை தொகுதிகளில் கடந்த 13-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை 3,370 பேரிடம் இக்கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.இந்த கருத்து கணிப்பில் பேராசிரியர்கள் மாணவர்கள் என  400 பேர் இந்தப் பணியில் ஈடுபட்டனர்.

இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்றால் அ.தி.மு.க.வுக்கு 34.1விழுக்காடு பேர் வாக்களிப்பதாக தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் தி.மு.க.வுக்கு 32.61விழுக்காடு பேர் வாக்களிப்போம் என கூறியுள்ளனர்.

தே.மு.தி.கவுக்கு 4.1 விழுக்காடு பேர் ஆதரவளித்துள்ளனர். பா.ம.கவுக்கு 3 விழுக்காடு பேர் ஆதரவைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் பாரதீய ஜனதா கட்சி 2.9 விழுக்காடு பேர் ஆதரவு பெற்று உள்ளது.

சட்டசபைத் தேர்தலில் அதிமுக - பாஜக இடையே கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 37 விழுக்காடு பேர் வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர். 23 விழுக்காடு பேர் மறுக்க முடியாது என்றும், 9 விழுக்காடு பேர் ஏதோ கொஞ்சம் நெருங்கி வருகிறது என்றும் 14 விழுக்காடு; பேர் வாய்ப்பே இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

அ.தி.மு.க, தி.மு.க.விற்கு மாற்று கட்சி தமிழ்நாட்டில் கிடையாது என்று 53.4 விழுக்காடு; பேர் கூறியுள்ளனர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.