Show all

மீண்டும் பெங்களூரை வீழ்த்தியது சென்னை: ஜடேஜா மற்றும் ஹர்பஜன் அபாரம்

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 11-வது சீசனின் 35-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் புனே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பாத்து வீச்சை தேர்வு செய்தது. 

இதையடுத்து பெங்களூர் அணியின் சார்பில் பார்தீவ் பட்டேல் மற்றும் மெக்கல்லம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். சென்னை அணியின் சிறப்பான பந்து வீச்சால் பெங்களூரு அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ரன் குவிக்கவும் மிகவும் சிரமப்பட்டனர். இறுதியாக பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக பார்த்திவ் படேல் 53 ரன்களும் டிம் சௌதீ 36 ரன்களும் குவித்தனர், மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இழக்க ரன்களில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது. சென்னை அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட்டும், ஹர்பஜன் சிங் 2 விக்கெட்டும், நிகிடி மற்றும் டேவிட் வில்லி தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். சென்னை அணியில் அனைவருமே இன்று சிறப்பாக பந்து வீசினர், குறிப்பாக ஜடேஜா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் சிறப்பாகப் பந்துவீசினர். 

இதையடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், சென்னை அணி சார்பில் ஷேன் வாட்சன் மற்றும் அம்பதி ராயுடு தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஷேன் வாட்சன் 11(14) ரன்கள், சுரேஷ் ரெய்னா 25(21) ரன்கள், அம்பதி ராயுடு 32(25) ரன்கள் மற்றும் ருவ் ஷோரேவும் 8(9) ரன்கள் என சென்னை அணியில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தது. இறுதியாக கேப்டன் டோனியுடன் டிவெயின் பிராவோ ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றது. இறுதியாக சென்னை அணி 18 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டோனி 31(23) ரன்களும், டிவெயின் பிராவோ 14(17) ரன்களும் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் காலத்தில் இருந்தனர். பெங்களூர் அணி தரப்பில் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் முருகன் அஸ்வின் மற்றும் கிராந்தோம் தல ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் சென்னை அணி மீண்டும் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது. ஜடேஜா ஆட்ட நாயகன் விருது பெற்றார். 

2018 IPL Team Position
Rank TEAM M W L NRR Points
1 CSK 10 7 3 +0.421 14
2 SRH 8 6 2 +0.514 12
3 KKR 9 5 4 +0.240 10
4 KXIP 8 5 3 +0.130 10
5 MI 9 3 6 +0.005 6
6 RCB 9 3 6 -0.367 6
7 DD 9 3 6 -0.450 6
8 RR 8 3 5 -0.726 6

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.