Show all

உண்மையைத் தொடர்ந்து வந்த புரளி.

மதுரையிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.

காலாண்டு விடுமுறைக்குப் பின்னர் பின்னர் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

இந்நிலையில், மதுரை காமராஜர் சாலையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வெடிகுண்டு வெடிக்கும் என்று காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் கூறினார்.

இது குறித்து அப்பகுதி காவல் நியைத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

வகுப்புகள் தொடங்கும் முன்பே வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் உடனடியாக அந்தப் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, வெடிகுண்டு சோதனைப் பிரிவு காவலர்கள் அந்த பள்ளிக்கு விரைந்து வந்தனர். அவர்கள், பள்ளி வளாகம் முழுவதும் சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே இந்தத் தகவல் புரளி என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்னர், மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு பேருந்துகளில் குண்டுகள் வெடித்தன என்பது குறிப்பிடத்தக்கது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.