Show all

பந்தயம் கட்டுவதை சட்டபூர்வமாக்கலாம்: லோதா குழு பரிந்துரை

இந்திய கிரிக்கெட் சங்கத்தை சீரமைக்க சில நாட்களுக்கு முன்பு முன்னாள் தலைமை நீதிபதி லோதா தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி பரிந்துரைகள் மற்றும் சீர்திருத்தங்கள் அடங்கிய 159 பக்க அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த லோதா கூறியதன் முக்கிய அம்சங்கள்:

கிரிக்கெட் ஆட்டத்தில் ஊழலை ஒழிக்க, பந்தயம் கட்டுதலை சட்டபூர்வமாக்குவது நல்லது. வீரர்கள், அதிகாரிகள் சூதாட்டப் பந்தயத்தில் ஈடுபடுவது குற்றமாகக் கருதப்பட வேண்டும்.

பிசிசிஐ-யை தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வர பரிசீலிக்கப்பட வேண்டும். அதே போல் பிசிசிஐ நிர்வாகிகளுக்கு 3 ஆண்டுகால பதவி மட்டுமே வழங்கப்பட வேண்டும். பிசிசிஐ தலைவர் பதவி வகிப்பவர்கள் 3 ஆண்டுகள் கொண்ட பதவிக்காலத்தில் 2 முறைக்கு மேல் பதவி வகிக்க முடியாது என்பது பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் பிற நிர்வாகிகள் 3 ஆண்டுகால பதவியை 3 முறைக்கு மேல் வகிக்கக் கூடாது.

பிசிசிஐயின் தேர்தல்களுக்கு தேர்தல் அதிகாரி நியமிக்கப்படவேண்டும். தேர்தலுக்கு இரு வாரங்களுக்கு முன்பு அவர் நியமிக்கப்படவேண்டும்.

பிசிசிஐயின் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர் போன்றவர்களுக்கென சில விதிமுறைகள் விதிக்கப்படவேண்டும். 70 வயதுக்கு மிகாத இந்தியராக இருக்கவேண்டும். அமைச்சராகவோ அரசு அதிகாரியாகவோ இருக்கக்கூடாது. 3 வருடங்களுக்கு மேல் யாரும் ஒரு பதவியில் இருக்கக்கூடாது.

தற்போதைய விதிமுறைகளின் படி பிசிசிஐ தலைவருக்கு 3 வாக்குகள் உள்ளன. பிசிசிஐ-யின் நிரந்தர உறுப்பினராகவும் அல்லது வாக்கெடுப்பில் சமநிலை ஏற்படும் போது இவரது கூடுதல் வாக்கு அனுமதிக்கப்படுகது சரியானதே, ஆனால் கூட்டத்தின் தலைவராக இருக்கும் கூடுதல் வாக்குரிமை நீக்கப்பட வேண்டும்.

9 உறுப்பினர்கள் கொண்ட பிசிசிஐ-க்கு உயர்மட்ட கவுன்சில் அமைக்கப்பட வேண்டும், இந்த 9 உறுப்பினரக்ளில் 5 பேர் வாக்கெடுப்பில் தேர்வு செய்யப்பட வேண்டும், 2 பேர் வீரர்கள் சங்க பிரதிநிதிகளாக செயல்பட வேண்டும். ஒரு பெண்ணும் இதில் இடம்பெற வேண்டும். தலைமைச் செயலதிகாரியே பிசிசிஐ-யின் அன்றாட செயல்பாடுகளை நிர்வகிக்க வேண்டும்.

வீரர்கள் சங்கம், முன்னாள் உள்துறைச் செயலர் ஜி.கே.பிள்ளை தலைமையில் அமைக்கப்படும் ஸ்டியரிங் கமிட்டியினால் உருவாக்கப்படும், இதில் முன்னாள் வீரர்கள் மொகீந்தர் அமர்நாத், அனில் கும்ளே மற்றும் வீராங்கனை டயானா எடுல்ஜி ஆகியோர் இடம்பெறுவர். முதல் தர கிரிக்கெட் ஆடிய அனைவரும் வீரர்கள் சங்கம் உள்ளடக்கும்.

அதாவது முதல்தர கிரிக்கெட்டில அடிய ஆடவர், மகளிர், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் ஆகியோர் இந்த சங்கத்தில் இடம்பெற வேண்டும்.

என ஏராளமான பரிந்துரைகளை லோதா தலைமையிலான கமிட்டி கூறியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.