Show all

சென்னை முழுவதும் இரண்டாவது நாளாக இன்றும் தொடரும் மழை.

06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தொடர்ந்து மூன்று நாட்கள் மழை தொடரும் என்று வானிலை மையம் அறிவித்த நிலையில், இரண்டாவது நாளான இன்று, அதிகாலையிலேயே சென்னையில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இரவிலும் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

கஜா புயல் தமிழகத்தை மொத்தமாக சூறையாடியுள்ளது. இந்த நிலையில் அடுத்தகட்டமாக தமிழகத்தில் மீண்டும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்கிறது. காலையில் இருந்து விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. எழும்பூர், கிண்டி, வடபழனி, அண்ணா சாலை, நுங்கம்பாக்கம்,தாம்பரம், பெருங்களத்தூர், குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்கிறது. செங்கல்பட்டிலும் கனமழை பெய்கிறது. கனமழை பெய்வதால் சென்னையில் காலையிலும் மாலையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையில் வடபழனி, அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், தாம்பரம் ஆகிய பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்று முழுக்க சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் இரவிலும் கனமழையை எதிர்பார்க்க முடியும். 

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது தொடர்ந்து வலுவடைந்து கொண்டே செல்கிறது. இதனால் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கணித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,979.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.