Show all

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் T20 போட்டியில் இந்தியா மூன்று விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டு டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்றது.  இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஆரோன் பின்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் பத்து ஓவர்கள் சிறப்பாக விளையாடினாலும் அடுத்த பத்து ஓவர்கள் மோசமாக ஆடியதால், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு வெறும் 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேஎல் ராகுல் 50 ரன்களும், கேப்டன் கோலி 24 ரன்களும் மற்றும் தோனி 26 ரன்களும் குவித்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் கோல்டர் நைல் 3 விக்கெட்டும், பெஹ்ரண்டாப், ஜம்பா மற்றும் கம்மின்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். 

இதையடுத்து, 127 ரன்கள் எடுத்தால் வெற்றி எளிய இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்து மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி 6 பந்துக்கு 14 ரன்கள் தேவையிருந்த நிலையில், உமேஷ் யாதவ் போட்டியின் இறுதி ஓவரை வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம், ஆஸ்திரேலிய அணி இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.