Show all

கட்டிடம் எல்லாம் பலமாகத்தான் இருக்கிறது, அடிப்படை சொதப்பலாக இருக்கிறதே! மைக்ரோமேக்ஸ்பேசி மலிவு, மக்கள் கருத்து

04,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மைக்ரமேக்ஸ் நிறுவனம் இன்பினிட்டி என்11 மற்றும் இன்பினிட்டி என்12 என்ற பெயரில் இரண்டு புதிய மிடுக்குப்பேசிகளை இந்தியாவில் கட்டுபடி விலையில் அறிமுகம் செய்துள்ளது. 

மைக்ரோமேக்ஸ் இந்த வகை புதிய மிடுக்குப்பேசிகளில் 4000 மைக்ரோ ஆம்பியர்மணி மின்கலம் வழங்கப்பட்டுள்ளது. 6.19 அங்குலத் தொடுதிரை, 3 ஜிபி ரேம் 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பகம் 13 எம்பி 5 எம்பி இரட்டை படப்பிடிப்பு கருவிகளைப் பின்பக்கமும், 16 எம்பி படப்பிடிப்பு கருவியை முன்பக்கமும் பெற்றிருக்கிறது. ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளமும் 4ஜிவோல்ட்இ இரட்டை செறிவட்டை வசதிகளும் கொண்டுள்ளது

இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் இன்பினிட்டி என்11 மிடுக்குப்பேசியின் விலை ரூ.8,999 என்றும், இன்பினிட்டி என்12 மிடுக்குப்பேசியின்; விலை ரூ.9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரு மிடுக்குப்பேசியின்; வொய்லா, புளு லகூன் மற்றும் வெல்வெட் ரெட் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. 

இந்த மிடுக்குப்பேசிகள் வரும் புதன்கிழமை முதல் கடைகளில் கிடைக்கும். புதிய மிடுக்குப் பேசிகளை வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு சில சலுகைகளையும் அறிவித்திருக்கிறார்கள்.

எல்லாம் சரி! இந்த விலை போல இரண்டு மடங்கு விலைக்கு விற்கிற சில நிறுவனப் பேசிகள், மைக்ரேமேக்ஸ் பேசிகளை விட பத்து மடங்கு காலம் உழைக்கிறதே அந்த வகையான தரத்தை இந்தப் புதிய அறிமுக மிடுக்குப்பேசியில் எதிர்பார்க்கலாமா? என்பதே மக்கள் கேள்வி.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,006.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.