Show all

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நடால், செரீனா 3-வது சுற்றுக்கு தகுதி

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீராங்கணையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 2-வது சுற்றில் நெதர்லாந்தை சேர்ந்த கிசி பெர்ட்டன்சை சந்தித்தார்.

இதில் செரீனா 7-6 (7-5), 6-3 என்ற நேர்செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

15-ம் நிலை வீராங்கணையான ரட்வன்ஸ்கா (போலந்து) 6-3, 6-2 என்ற கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த மக்டாவை வீழ்த்தினார். மற்ற ஆட்டங்களில் வீனஸ் வில்லியம்ஸ், மேடிசன், பெதானி (அமெரிக்கா) ஆகியோர் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

8-ம் நிலை வீரரும், 2 முறை சாம்பியனுமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 2-வது சுற்றில் அர்ஜென்டினாவை சேர்ந்த டியோகோவை எதிர்கொண்டார். இதில் நடால் 7-6 (7-5), 6-3, 7-5 என்ற கணக்கில் வென்றார்.

உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் 2-வது சுற்றில் ஆஸ்திரியாவை சேர்ந்த ஆண்டிரியாசை சந்தித்தார். இதில் ஜோகோவிச் 6-4, 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்றார்.

மற்ற ஆட்டங்களில் 7-ம் நிலை வீரர் டேவிட் பெரர்- (ஸ்பெயின்) 10-ம் நிலை வீரர் ரோனிக் (கனடா), சோங்கா (பிரான்ஸ்), டேவிட் கோபின் (பெல்ஜியம்) ஆகியோர் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.