Show all

ஆசிய கோப்பை கிரிக்கெட் 2018: மீண்டும் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா

பதினான்காவது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்-4 சுற்றில், நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. பாகிஸ்தான் அணியில் ஹாரிஸ் சோகைல், உஸ்மான் கான் ஆகியோருக்கு பதிலாக முகமது அமிர், ஷதப்கான் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். ‘டாஸ்’ ஜெயித்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக இமாம் உல்-ஹக், பஹார் ஜமான் ஆகியோர் களம் இறங்கினார்கள். பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக சோயிப் மாலிக் 90 பந்துகளில் 78 ரன்களும், சர்ப்ராஸ் அகமது 44 ரன்களும் குவித்தனர். 4-வது விக்கெட்டுக்கு சர்ப்ராஸ் அகமது-சோயிப் மாலிக் ஜோடி 107 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து, 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க வீரர்களான ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 39.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்து இந்திய அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற செய்தனர். ஷிகர் தவான் 100 பந்துகளில் 114 ரன்கள் எடுத்த ரன்-அவுட் ஆனார். கேப்டன் ரோகித் சர்மா 111 ரன்னுடனும், அம்பத்தி ராயுடு 12 ரன்னுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். சூப்பர்-4 சுற்றில் தொடர்ந்து 2-வது வெற்றியை பதிவு செய்து இறுதிப்போட்டி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.