Show all

ஆசிய கோப்பை கிரிக்கெட்: வங்காளதேச அணியை 45 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 1984 ஆம் ஆண்டு முதல்  இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை  நடைபெற்று வருகிறது. ஆனால்  ஆசிய கோப்பையை இம்முறை 20 ஓவர் வடிவில் நடத்த முடிவு செய்யப்பட்டது.  இதன்படி இந்தத் தொடரின் முதல் போட்டி மிர்பூரில் நேற்று  நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் வங்காளதேச அணிகள் மோதின.

 

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்காள தேச அணி முதலில் பந்து விசீயது.

இந்திய அணியில், தவான் 2 ரன்கள், விராட்கோலி 8 ரன்கள், சுரெஷ் ரெய்னா 13 ரன்கள், யுவராஜ் சிங் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தனர்.

அதனால் இந்தியஅணி 14.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் மட்டுமே  சேர்த்தது.

ஆனால் அடுத்து வந்த  ரோகித் சர்மா 55 பந்துகளில்83 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். மேலும், 18 பந்துகளில் 31 ரன்கள் விளாசிய  பாண்டையாவும் வெளியேறினார்.

இறுதியில் 20ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 166  ரன்கள் எடுத்தது.

 

167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி களம் கண்டது.

வங்கதேச அணியில், தொடக்கஆட்டக்காரர்களான சவும்யா சர்கார் 11 ரன்னும், முகமது மிதுன் 1 ரன்னும், இம்ருல் கயேஸ் 14 ரன்னும், ஷகீப் அல் ஹசன் 3ரன்களும், மகமதுல்லா 7 ரன்களும், மஷ்ரபி மோர்டாசா ரன் ஏதும் எடுக்காமலே அவுட் ஆனார். இதில், சபீர் ரஹ்மான் அதிகபட்சமாக  44 ரன்கள் எடுத்து வெளியேறினார். முடிவில், 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 121 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் இந்திய அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணியின் பந்து வீச்சாளர்களில் நெஹ்ரா 3 விக்கெட்டுகளும், பம்ரா, பாண்டையா, அஷ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

 

 

 

 

 

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.