Show all

ஆன்டி முர்ரே தோல்வி

இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

நான்காவது சுற்றில், உலகின் 3-ம் நிலை வீரரான ஆன்டி முர்ரே, தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கெவின் ஆண்டர்சனுடன் மோதினார். 7-6 (7-5), 6-3, 6-7 (2-7), 7-6 (7-0) என கடினமாகப் போட்டியிட்டு முர்ரேவைத் தோற்கடித்தார் ஆண்டர்சன். இந்த ஆட்டம் 4 மணி நேரம் 18 நிமிடங்கள் நடந்தது.

கிராண்ட்ஸ்லாம் போட்டியில் காலிறுதிக்கு முன்பு தோற்றுப்போவது இது தான் முதல்முறை.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.