Show all

ஐஎஸ்எல்: கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வென்றது கொல்கத்தா

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் கொல்கத்தா அணி 2-1 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை தோற்கடித்தது. இதன் மூலம் 2-வது வெற்றியைப் பதிவு செய்துள்ள கொல்கத்தா 7 புள்ளி களுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.

கொல்கத்தாவில் இந்த ஆட்டத்தின் 6-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தது. 32-வது நிமிடத்தில் கேரள ஸ்டிரைக்கர் சான்செஸ் வாட் கோல் கம்பம் வரை பந்தை எடுத்துச் சென்றார். மிக அருகில் சென்றபோதும் அவருடைய ஷாட்டில் வேகமில்லாததால் மிக எளிதாக முறியடித்தார் கொல்கத்தா கோல் கீப்பர்.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்திலும் அபாரமாக ஆடிய கொல்கத்தா அணி 52-வது நிமிடத்தில் 2-வது கோலை அடித்தது. மறுமுனையில் தொடர்ந்து போராடிய கேரள அணி 80-வது நிமிடத்தில் ஆறுதல் கோலை அடித்தது. இதன்பிறகு கோல் எதுவும் விழாததால் கொல்கத்தா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.