Show all

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள்

பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் இன்று அபுதாபியில் தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் அடில் ரஷித் அறிமுகமானார்.

துவக்க வீரர் ஷான் மசூத் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆண்டர்சன் பந்தில் போல்டாகி வெளியேறினார். இதையடுத்து மற்றொரு துவக்க வீரர் முகமது ஹபீசுடன், சோயிப் மாலிக் இணைந்தார். இந்த ஜோடி இங்கிலாந்து பந்துவிச்சாளர்களுக்கு கடும் நெருக்கடியை அளித்தது. சோயிப் மாலிக் சதம் அடித்தார். ஹபீஸ், 98 ரன்களில் ஆட்டமிழந்து சதம் வாய்ப்பை தவறவிட்டார்.

யூனிஸ்கான் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியின்மூலம் அதிக டெஸ்ட் ரன்கள் அடித்த பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை யூனிஸ்கான் எட்டினார்.

யூனிஸ்கானைத் தொடர்ந்து சோயிப்புடன் இணைந்த மிஸ்பா, 3 ரன்களில் விக்கெட்டை இழக்க, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் சேர்த்துள்ளது. சோயிப் மாலிக் 116 ரன்களுடனும், சபீக் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நாளை இரண்டாவது நாள் ஆட்டம் நடக்கிறது

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.