Show all

2வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா 214 ரன்களில் சுருண்டது: இந்தியா 80 விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் டாசில் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது.  இந்திய அணியில் அமித் மிஸ்ரா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு, பதிலாக, இஷாந்த் ஷர்மா மற்றும் ஸ்டூவர்ட் பின்னி சேர்க்கப்பட்டுள்ளனர்.தென் ஆப்பிரிக்க தரப்பில், டேல் ஸ்டெயின், வெர்னான் பிளான்டர், சிமன் ஹார்மர் ஆகியோர் விலகியுள்ள நிலையில், டுமினி, மோர்கல், கெய்ல் அப்பார்ட் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தென் ஆப்பிரிக்க தரப்பில் 100வது டெஸ்ட் போட்டியில் ஆடும் டிவில்லியர்ஸ் அதிகபட்சமாக 85 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் நடையை கட்டினர். இதனால் முதல் இன்னிங்சில், 59 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த தென் ஆப்பிரிக்க அணி  214 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய தரப்பில், அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். வருண் ஆரோன் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்க்சை தொடங்கிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்துள்ளது. விஜய் 28 ரன்களுடனும், தவான் 45 ரன்களுடனும் களத்திலுள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.