Show all

இந்தியா அணி 8 விக்கெட் இழப்புக்கு 292 ரன்கள் குவித்தது

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே நடக்கும் 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அனி 2-வது நாள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 292 ரன்கள் எடுத்துள்ளது.

கொழும்பு, சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. முதல்நாள் ஆட்டத்தின் முடிவில், 15 ஓவர்களில், இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 19 ரன்களுடனும், விராட் கோலி 14 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று ஆட்டம் தொடங்கிய உடனேயே கோலியின் விக்கெட்டை எடுத்தது இலங்கை அணி. அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். எட்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த புஜாராவும் மிஸ்ராவும் சிறப்பாக விளையாடினர். 214 பந்துகளில் அவர் சதம் அடித்தார். இது அவருடைய 7-வது டெஸ்ட் சதமாகும். மிஸ்ரா 59 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஆட்டத்தின் இறுதிப் பகுதியில் மழை குறுக்கிட்டதால் சற்று முன்னதாகவே 2-வது நாள் ஆட்டம் முடிவடைந்தது. இந்திய அணி 95.3 ஓவர்களில் 292 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 135, இஷாந்த் சர்மா 2 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இலங்கை வீரர் பிரசாத் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.