Show all

முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள் அறிவிப்பு

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.  தென்ஆப்பிரிக்கா அணி டி20 தொடரை முடித்துள்ளது.  5 போட்டிகள் கொண்ட தொடரில் தென்ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.


அதன்பின் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிக்கான இந்திய அணி இன்று டெல்லியில் நடந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.


முதல் இரண்டு போட்டிக்கான இந்திய வீரர்கள் விவரம்:-


1. கோலி (கேப்டன்), 2. முரளி விஜய், 3. தவான், 4. புஜாரா, 5. ரகானே, 6. சகா (விக்கெட் கீப்பர்), 7. அஸ்வின், 8. ஜடேஜா, 9. புவனேஸ்வர் குமார், 10. உமேஷ் யாதவ், 11. லோகேஷ் ராகுல் 12. ஸ்டூவர்ட் பின்னி, 13. வருண் ஆரோன், 14. இசாந்த் சர்மா.





மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.