Show all

பீட்டர் முகர்ஜியின் மகன் ராகுல் முகர்ஜி, ஷீனா போராவை காதலித்துள்ளார்

2012ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட மும்பை தொழிலதிபர் இந்திராணி முகர்ஜியின் மகள் ஷீனா போராவின் செல்போனில் இருந்து காதல் முறிவு எஸ்எம்எஸ்கள் தனக்கு வந்ததாக அவரது முன்னாள் காதலன் ராகுல் முகர்ஜி கூறியுள்ளார்.

பீட்டர் முகர்ஜியின் மகன் ராகுல் முகர்ஜி, ஷீனா போராவை காதலித்துள்ளார்.

திடீரென ஷீனா போரா மாயமாக, அவரது செல்போனில் இருந்து, தன்னுடனான நட்பை முறித்துக் கொள்ள விரும்புவதாக தொடர்ந்து எஸ்.எம்.எஸ்.கள் வந்துள்ளதாக காவல்துறையிடம் ராகுல் கூறியுள்ளார்.

மேலும், ஷீனா குறித்து இந்திராணியிடம் தான் கேட்டபோது, அவளை பின்தொடர்வதை நிறுத்திவிடு என்று அவர் மிரட்டியதாகவும் ராகுல் தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.