Show all

டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர் மற்றும் பேட்டிங் தரவரிசை

துபாய், டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்து வீச்சாளர் தரவரிசையில் அஸ்வின் ஏற்றத்தையும், பேட்டிங் தரவரிசையில் இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி சரிவையும் சந்தித்துள்ளனர்.

கோலிக்கு ஏமாற்றம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.

பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி (மொத்தம் 756 புள்ளி) 10-வது இடத்தில் இருந்து 11-வது இடத்திற்கு இறங்கியுள்ளார். இதன் மூலம் முதல் 10 இடத்திற்குள் எந்த இந்தியரும் இல்லை என்ற பரிதாபமான நிலைமை காணப்படுகிறது. கொழும்பு டெஸ்டில் 126 ரன்கள் விளாசிய இந்திய வீரர் ரஹானே இரு இடங்கள் முன்னேறி தனது வாழ்க்கையில் சிறந்த தரநிலையாக 20-வது இடத்தை பிடித்துள்ளார். மற்ற இந்திய வீரர்கள் முரளிவிஜய் 22-வது இடத்திலும் (ஒரு இடம் குறைவு), ரோகித் சர்மா 52-வது இடத்திலும் (5 இடம் உயர்வு), கொழும்பு டெஸ்டின் நாயகன் லோகேஷ் ராகுல் 87-வது இடத்திலும் (30 இடம் ஏற்றம்) உள்ளனர்.;

பந்து வீச்சாளர்களின் தரவரிசை தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் 9-வது இடத்தில் இருந்து 8-வது இடத்திற்கு வந்துள்ளார். இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் அவருக்கு இந்த முன்னேற்றம் கிட்டியுள்ளது. முதல் 10 இடங்களில் உள்ள ஒரே இந்தியர் அஸ்வின் தான்.

இதே போட்டியில் 7 விக்கெட்டுகளை சாய்த்த மற்றொரு இந்திய சுழற்பந்த வீச்சாளர் அமித் மிஸ்ரா கிடுகிடுவென 42 இடங்கள் எகிறி 39-வது இடத்தை பிடித்துள்ளார். இது அவரது உயரிய தரநிலையாகும். இஷாந்த் ஷர்மா 21-வது இடத்திலும், உமேஷ் யாதவ் 44-வது இடத்திலும் இருக்கிறார்கள். டெஸ்ட் ஆல்-ரவுண்டர்களின் தரவரிசையில் முதலிடத்தில் வங்காளதேசத்தின் ஷகிப் அல்-ஹசனும் (384 புள்ளி), 2-வது இடத்தில் இந்தியாவின் அஸ்வினும் (341 புள்ளி), 3-வது இடத்தில் தென்ஆப்பிரிக்காவின் பிலாண்டரும் (337 புள்ளி) மாற்றமின்றி தொடருகிறார்கள்.

டாப்-10 பேட்ஸ்மேன்கள்

வரிசை - வீரர் - நாடு - புள்ளி

1. ஸ்டீவன் சுமித் - ஆஸ்திரேலியா - 910
2. டிவில்லியர்ஸ் - தென்ஆப்பிரிக்கா - 890
3. ஜோ ரூட் - இங்கிலாந்து - 889
4. அம்லா - தென்ஆப்பிரிக்கா- 881
5.மேத்யூஸ் - இலங்கை - 867
6.யூனிஸ்கான் - பாகிஸ்தான் - 867
7.சங்கக்கரா - இலங்கை - 827
8.கனே வில்லியம்சன் - நியூசிலாந்து - 813
9.டேவிட் வார்னர் - ஆஸ்திரேலியா - 775
10. கிறிஸ் ரோஜர்ஸ் - ஆஸ்திரேலியா - 761

டாப்-10 பந்து வீச்சாளர்கள்

1. ஸ்டெயின் தென்ஆப்பிரிக்கா 905
2. ஸ்டூவர்ட் பிராட் இங்கிலாந்து 835
3. டிரென்ட் பவுல்ட் நியூசிலாந்து 814
4. யாசிர் ஷா பாகிஸ்தான் 810
5. ஜேம்ஸ் ஆண்டர்சன் இங்கிலாந்து 807
6. மிட்செல் ஜான்சன் ஆஸ்திரேலியா 773
7. பிலாண்டர் தென்ஆப்பிரிக்கா 770
8. அஸ்வின் இந்தியா 769
9. ஹெராத் இலங்கை 748
10. டிம் சவுதி நியூசிலாந்து 713

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.