Show all

துரோணாச்சார்யா விருது பெறுபவர்கள் பட்டியல் அறிவிப்பு

விளையாட்டு அரங்கில் சிறந்து விளங்கும் பயிற்சியாளர்களுக்கு ஆண்டுதோறும் துரோணாச்சார்யா விருது வழங்கப்படும். இதன்படி, இம்முறை விருது பெறுபவர்கள் பட்டியலை மத்திய விளையாட்டு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதன்படி, அனுப் சிங் (மல்யுத்தம்), நவல் சிங் (பாராலிம்பிக்), நிகர் அமின் (நீச்சல்), எஸ்.ஆர்.சிங் (குத்துச்சண்டை), ஹர்பன்ஸ் சிங் (தடகளம்) ஆகிய 5 பேர் துரோணாச்சார்யா விருதை பெறவுள்ளனர். இந்த இரண்டு விருது பெறுபவர்களுக்கும் ரூ.5 லட்சம் பரிசாக அளிக்கப்படும். தேசிய விளையாட்டு தினமான ஆக.,29ல் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருதை வழங்குவார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.