Show all

சாம்பியன் பட்டம் வென்றனர் பெடரர் மற்றும் செரீனா

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலக தர வரிசையில் 3–வது இடத்தில் இருக்கும் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 7–6 (7–1), 6–3 என்ற நேர்செட்டில் உலகின் முதல் நிலை வீரர் நோவாக் ஜோகோவிச்சை (செர்பியா) வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். இந்த வெற்றியின் மூலம் தர வரிசையில் பெடரர் 3–வது இடத்தில் இருந்து 2–வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். 2–வது இடத்தில் இருந்த ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) 3–வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலகின் முதல் நிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6–3, 7–6 (7–5) என்ற நேர்செட்டில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப்பை சாய்த்து தொடர்ந்து 2–வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த ஆண்டில் செரீனா வென்ற 5–வது பட்டம் இதுவாகும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.