Show all

ஜாகீர் கான் மற்றும் கிரீம் ஸ்வான் ஆகியோரது பந்துவீச்சை எதிர்கொள்வதுதான் சவாலாக இருந்தது : சங

இலங்கை கிரிக்கெட் வீரர் சங்கக்காரா, இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.கிரிக்கெட்டில் இருந்து விடைபெறும் 37 வயதான சங்கக்கராவுக்கு வழியனுப்பு விழா காலே மைதானத்தில் போட்டி முடிந்ததும் அரங்கேறியது. இந்த விழாவில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே, முன்னாள் அதிபர் ராஜபக்சே, இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ரணதுங்கா, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர், மற்றும் முன்னாள் வீரர்கள், இலங்கை, இந்தியா அணியின் வீரர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது நிருபர்களிடம் சங்கக்காரா கூறியதாவது:-

இந்த தொடரில் அஸ்வின் எனக்கு சவாலாக இருந்தார். 4 இன்னிங்சுகளிலும் அஸ்வின் பந்தில் அவுட் ஆனேன். ஆனால் எனது 15 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான், இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் கிரீம் ஸ்வான் ஆகியோரது பந்துவீச்சை எதிர்கொள்வதுதான் சவாலாக இருந்தது.

பல நேரங்களில், இவர்களது பந்துவீச்சில் என்னால் சிறப்பாக செயல்பட இயலவில்லை. இருப்பினும் யுத்திகளை மாற்றிக்கொண்டு இவர்களை எதிர்கொள்ள முயற்சி செய்துள்ளேன். வாசிம் அக்ரம் பந்து வீச்சு ஸ்டைல் சிறப்பாக இருக்கும். நல்லவேளை அவரது பந்துவீச்சு காலத்தில் நான் இளம் வீரராக இருந்தேன். அப்படியும், ஒருமுறை அவரது பந்து வீச்சில் அவுட் ஆகியுள்ளேன்.

பிராட்மேனுக்கு சமமான வீரர் என்று என்னைப் பற்றி எனது பயிற்சியாளர் கூறியுள்ளார். அவர் அநேகமாக ஜோக் அடித்திருப்பார் என்று நினைக்கிறேன். ஏனெனில், பிராட்மேன் பேட்டிங்கை நான் வீடியோவில் பார்த்து இருக்கிறேன். அவர் ஒரு அபூர்வமான வீரர் ஆவார். கிரிக்கெட் சகாப்தத்தில் அவர்தான் சிறந்த வீரர். அவருடன் யாரையும் ஒப்பிட இயலாது. இவ்வாறு சங்ககாரா கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.