Show all

3000 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை லலிதா சிவாஜி பாபர் சாதனை

உலக தடகள போட்டியில் மகளிருக்கான 3000 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை லலிதா சிவாஜி பாபர் புதிய சாதனை படைத்ததோடு இறுதி சுற்றுக்கு முன்னேரியுள்ளார். சீன தலைநகர் பெய்ஜிங்கில் மகளிருக்கான 3000 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தின் தகுதி சுற்று நடைபெற்றது. 3 பிரிவுகளாக நடைபெற்ற இவ்போட்டியின் 2-வது பிரிவில் பங்கேற்ற இந்திய வீராங்கனை லலிதா சிவாஜி பாபர் 9: 28.86 வினாடிகளில் இலக்கை கடந்து 4-வது இடத்தை பிடித்தார். இருப்பினும் சிறப்பான செயல்பாட்டால் சிறந்த 6 வீராங்கனைகளில் ஒருவராக இடம் பிடித்த லலிதா இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.

2014-ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில் 9:34.13 வினாடிகளில் இலக்கை கடந்து வெள்ளிப் பதக்கம் வென்ற லலிதா இம்முறை 6 வினாடிகள் முன்னிலைப் பெற்று தனது முந்தைய பதிவை முறியடித்ததோடு உலக தடகள போட்டியின் 3000 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தின் இறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற சாதனையும் புரிந்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.