Show all

சின்சினாட்டி டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய சானியா ஜோடி

அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாநிலத்தில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. காலியிறுதியில் உலகத் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள சானியா- ஹிங்கிஸ் ஜோடி அமெரிக்காவின் கிறிஸ்டினா மெக்ஹலே- கோகோ வான்டேவெகே ஜோடியை எதிர்கொண்டது. சானியா ஜோடி 6-4, 6-1 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

சானியா ஜோடி அரையிறுதிப் போட்டியில் சீன தைபே ஜோடியான ஹயோ சிங் சான்- யங் ஜன் சான் ஜோடியை எதிர்கொள்கிறது. ஆனால் போபண்ணா ஜோடி மற்றும் பயஸ்- வாவ்ரிங்கா ஜோடி தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறியது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.