Show all

ஆஷஸ் தொடர்: ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 481 ரன்கள் குவிப்பு

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் ஓவலில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 79.4 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்டீவ் ஸ்மித் 78 ரன்களுடனும், வோக்ஸ் 47 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஸ்மித் மற்றும் வோக்ஸ் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். வோக்ஸ் 76 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் ஸ்மித் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இந்த வருடத்தில் ஸ்மித் அடிக்கும் நான்காவது சதம் இதுவாகும். 143 ரன்கள் குவித்த சுமித் 8-வது விக்கெட்டாக ஆட்டம் இழந்தார். 9-வது நபராக களம் இறங்கிய மிட்செல் ஸ்டார்க் 52 பந்தில் 58 ரன்கள் குவிக்க, ஆஸ்திரேலியா 125.1 ஓவரில் 481 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டோக்ஸ், பின், மொயீன் அலி தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள். ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 100 விக்கெட்டை கைப்பற்றினார் பின். அதன்பின் மேலும் இரண்டு விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தினார்

பின்னர், இங்கிலாந்து முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.