Show all

1.இரண்டாம் நாள் முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 140 ரன்களை சேர்த்தது

இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி பி. சாரா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 319 ரன்களை சேர்த்தது. இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 393 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. ராகுல் (108), கோலி (78), சர்மா (79), சஹா (56) ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன் குவிக்க காரணமாக இருந்தனர்.

பின்னர் இலங்கை அணி களம் இறங்கியது. அந்த அணி 2-வது ஓவரின் முதல் பந்தில் முதல் விக்கெட்டை இழந்தது. உமேஷ் யாதவ் வீசிய பந்தில் கருணாரத்னே எல்.பி.டபிள்யூ. ஆகி வெளியேறினார்.

அடுத்து சங்ககரா களம் இறங்கினார். இவருக்கு இதுதான் கடைசி சர்வதேச போட்டியாகும். ஆகவே, அவர் மைதானத்திற்குள் நுழைந்ததும் இந்திய அணியினர் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்து மரியாதை செலுத்தினர். தனது கடைசி போட்டியின் முதல் இன்னிங்சில் சங்ககரா 32 ரன்னில் ஆட்டம் இழந்தார். இரண்டாம் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 140 ரன்களை சேர்த்தது.

திரிமன்னே 28 ரன்களுடன் மேத்யுஸ் 19 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.