Show all

புலி படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது

விஜய், ஹன்சிகா, சுருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோரின் நடிப்பில் இயக்குநர் சிம்புதேவன் இயக்கியிருக்கும் புலி திரைப்படம், விஜய் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே வெளியான புலி படத்தின் முதல் டீசர் மற்றும் பாடல்கள் ஆகியவை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

அடுத்ததாக புலி படத்தின் டிரைலரை 20 ம் தேதியில் வெளியிடுகிறோம் என்று நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாளில், நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார். விஜயின் அறிவிப்பை புலி படத்தின் பாடல்களை வாங்கியிருக்கும் சோனி நிறுவனமும் உறுதி செய்து.

இதனைத் தொடர்ந்து புலி படத்தின் டிரைலர் 20 ம் தேதி நள்ளிரவு சரியாக 12 மணிக்கு வெளியிடப்பட்டது. பாடல்கள், மற்றும் விஜயின் அனல் பறக்கும் சண்டைக்காட்சிகளில் பிரம்மாண்டம் ஜொலிக்கிறது. காட்சிகளின் ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங் என அனைத்தும் விஜய் ரசிகர்களை கிறங்கடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

யூடியூபில் வெளியான உடனே விஜய் ரசிகர்கள் அதை ஷேர் செய்ய ஆரம்பித்தார்கள். இதனால் டிரைலர் வெளியான சில மணி நேரங்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான ஹிட்ஸ் கிடைத்தது. படத்துக்கான எதிர்பார்ப்பை இந்த டிரைலர் மேலும் அதிகமாக்கியுள்ளது என்றே சொல்லவேண்டும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.