Show all

இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் யார்

இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் யார் என்பது குறித்து வரும் செப்டம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்படும் என்று பிசிசிஐ செயலர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

தனியார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த பிசிசிஐ செயலர் அனுராக் தாகூர் வரும் அக்டோபர் மாதம் முதல் 72 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள், மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளது. இந்த தொடருக்கு முன் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும். புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும் பொறுப்பை, முன்னாள் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், சவுரவ் கங்குலி, விவிஎஸ் லக்ஷ்மண் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனை குழுவிடம் ஒப்படைத்துவிட்டோம்.

எந்த ஒரு அணிக்கு முழு நேர பயிற்சியாளர் இருப்பது கட்டாயம். எனவே இது குறித்து முடிவு எடுக்க எங்களுக்கு சில காலம் தேவைப்படும். பெரும்பாலும் தென் ஆப்பிரிக்க தொடருக்கு முன் அடுத்த பயிற்சியாளர் தேர்வு செய்யப்படுவார். இந்திய அணியின் இயக்குநராக கடந்த சில மாதங்களாக ரவி சாஸ்திரி சிறப்பாக பணியாற்றி வருகிறார். அவரை பற்றி நல்ல முறையில் கருத்துக்களை வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்”. என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.