Show all

சல்மான்பட், முகமது ஆசிப், முகமது அமீர் ஆகியோர் சர்வதேச போட்டிகளில் விளையாடலாம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2010-ம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அப்போது அந்த அணியை சேர்ந்த சல்மான்பட், முகமது ஆசிப், முகமது அமீர் ஆகியோர் ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டு சிறை தண்டனையும் பெற்றனர்.

இதைத்தொடர்ந்து 3 வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) 5 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை விளையாட தடை விதித்தது.

இதில் முகமது அமீரின் 5 ஆண்டு தடையை ஐ.சி.சி. கடந்த ஜனவரி மாதம் தளர்த்தியது. அவர் உள்ளூர் போட்டியில் விளையாட அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையே சல்மான் பட்டும், முகமது ஆசிப்பும் வருகிற 2-ந்தேதி முதல் விளையாட அனுமதிக்கப்படுவதாக ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. இருவரின் மீதான தடை வருகிற 1-ந்தேதி நள்ளிரவோடு முடிகிறது. புனர்வாழ்வு அடிப்படையில் இருவரும் வருகிற 2-ந்தேதி முதல் ஆட அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 வீரர்களும் சர்வதேச போட்டிகளில் வருகிற 2-ந்தேதி முதல் விளையாடலாம். பாகிஸ்தான் அணி அக்டோபர் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக ஐக்கிய அரபு எமிரேட்சில் விளையாடுகிறது.

இந்த தொடரில் விளையாட 3 பேரும் தகுதியானவர்கள். ஆனால் இவர்கள் அணிக்கு தேர்வு செய்யப்படுவது என்பது மிகவும் கடினமே.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.