Show all

சர்வதேச இந்திய ஹாக்கி நடுவர்களின் எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது

தற்போது தேசிய அளவிலான ஹாக்கி போட்டிகளுக்கு நடுவராக இருந்து வருகிறார் தீபக் ஜோஷி. 2012-ம் ஆண்டு செயில் நேஷனல் காலேஜ் சாம்பியன்சிப் போட்டியில் நடுவராக தனது ஹாக்கி பயணத்தை தொடர்ந்த தீபக் இந்த ஆண்டு கேரளாவில் நடந்த 35-வது தேசிய போட்டியிலும் நடுவராக இருந்தார். ஆடவருக்கான சீனியர் நேஷனல் சாம்பியன்ஷிப், டிவிசன்-ஏ மற்றும் பி உட்பட ஹாக்கி இந்தியாவின் அனைத்து தேசியப் போட்டிகளிலும் நடுவராக இருந்து வருகிறார்.

27-வயதான தீபக் நடுவராவதற்கு முன் ஹாக்கி வீரராக இருந்தார். 2007 முதல் 2010 வரை உத்தராகண்ட் மாநில ஹாக்கி அணியில் விளையாடினார். பிறகு, 2011-ல் பாட்டியாலாவில் ஸ்போர்ட்ஸ் கோச்சிங் டிப்ளமோ படிப்பை நிறைவு செய்தார். 2012-ல் புதுடெல்லி, எம்.டி.சி. ஸ்டேடியத்தில் பயிற்சியாளராக சேர்ந்தார். தற்போது வரை, டெல்லி ஹாக்கியின் தொடர் பயிற்சியாளராக இருந்து வருகிறார்.

இந்நிலையில், அண்மையில், நடந்து முடிந்த வால்வோ ஹாக்கி போட்டியில் இவரது திறமையை பாராட்டிய சர்வதேச ஹாக்கி சம்மேளனம் இவரை சர்வதேச அவுட்டோர் அம்பயராக அறிவித்துள்ளது. ஏற்கனவே, இந்த ஆண்டு இளம் ஹாக்கி நடுவர் தீபா சர்வதேச அவுட்டோர் அம்பயராக அறிவிக்கப்பட்டார். தற்போது, தீபக் ஜோஷியும் அறிவிக்கபட்டிருக்கிறார். இதையடுத்து, சர்வதேச இந்திய ஹாக்கி நடுவர்களின் எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.