Show all

தரவரிசையில் முன்னேற்றம் அடைந்த அஸ்வின் மற்றும் தவான்

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் காலே மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா 63 ரன்னில் சுருண்டது. என்றாலும், முதல் இன்னிங்சில் இலங்கையை இந்தியா 183 ரன்னில் சுருட்டியது. இதற்கு அஸ்வினின் பந்து வீச்சு முக்கிய காரணமாகும். இவர் 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

2-வது இன்னிங்சில் 4 விக்கெட் வீழ்த்தினார். ஆகமொத்தம் 10 விக்கெட்டுகள் வீழ்த்தியதால் தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளார். இந்த போட்டிக்கு முன்னர் 12-வது இடத்தில் இருந்தார். தற்போது மூன்று இடங்கள் முன்னேறி 9-வது இடத்திற்கு வந்துள்ளார். முதல் 10 இடத்திற்குள் இருக்கும் ஒரே வீரர் இவர்தான்.

முதல் இன்னிங்சில் சதம் அடித்த தவான் 15 இடங்கள் முன்னேறி 32-வது இடத்தை பிடித்துள்ளார். டெஸ்ட் தரவரிசையில் தவானின் சிறந்த இடம் இதுதான். சதம் அடித்தாலும் விராட் கோலி 10-வது இடத்திலேயே நீடிக்கிறார்.

இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த சண்டிமால் தரவரிசையில் 22 இடங்கள் முன்னேறி 23-வது இடத்தை பிடித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.