Show all

இந்திய ஜூனியர் கால்பந்து அணி ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையில் விளையாடுகிறது

மலேசியாவில் உள்ள மலாக்கா நகரில் வரும் 19-ந்தேதி (நாளை மறுதினம்) பேம்- பிரன்ஸ் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்குகிறது. இதில் 19 வயதுக்குட்பட்ட வீரர்கள் கொண்ட இந்திய ஜூனியர் கால்பந்து அணி பங்கேற்கிறது.

மலேசியாவின் பிரென்ஸ் யுனைடெட், பெல்டா யுனைடெட் எப்.சி., தாய்லாந்தின் சான்புரி எப்.சி. ஆகிய அணிகளுடன் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. லீக் ஆட்டத்தில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி, பெல்டா யுனைடெட் அணியை எதிர்கொள்கிறது.

மலேசியாவில் நடைபெறும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய அணி வீரர்களின் விபரம் பின்வருமாறு:-

சுக்தேவ் பாட்டீல், ஹவோகிப் ஜெதிதி, நிஷு குமார், அமே ரானாவாடே, கபில் போரோ, மொஹம்மது சாஜித் தாட், லல்தாகிமா நூருதின், சுமன் சர்கார், மல்சாம்சுவாலா, பித்யானந்தா சிங், வினித் ராய், லோகன் மொய்ராங்தம், மிலன் பாசுமேட்டரி, ஆசிக் குருனியன், லால்ரின்சுவாலா சாங்தே, மாவிமிங்தாங்கா.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.