Show all

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை சமன் செய்தது நியூசிலாந்து

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2ஆவது டி20 போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன் படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்டின் கப்தில் 35 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ககிசோ ரபடா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர், களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பர்ஹான் பெஹார்டியன் 27 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் மெக்கல்லம், மெக்லெனகன், இஸ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்று சமன் செய்தது நியூசிலாந்து அணி. முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. ஆட்ட நாயகன் விருதும், தொடர் நாயகன் விருதும் மார்டின் கப்திலுக்கு வழங்கப்பட்டது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.