Show all

அதிகம் சம்பாதித்த விளையாட்டு வீராங்கனை மரியா ஷரபோவா

பல்வேறு துறைகளில் அதிகம் சம்பாதிக்கும் நபர்களின் பட்டியலை வெளியிட்டு வரும் போர்பஸ் பத்திரிகை இந்த ஆண்டுக்கான, அதிகம் சம்பாதித்துள்ள விளையாட்டு வீராங்கனைகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில், ரஷ்யா நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா முதல் இடத்தை பிடித்துள்ளார்.

அவர், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை ரூ.189 கோடி சம்பாதித்து உள்ளார்.

இந்த பட்டியலில் ஷரபோவா, தொடர்ந்து 11–வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.