Show all

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 192 ரன்கள் முன்னிலை

இலங்கை அணி, முதல் இன்னிங்ஸில், 49.4 ஓவர்களில் 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன்பின்னர் தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்தது இந்திய அணியின் ராகுல் (7), ரோஹித் சர்மா (9) ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். இதன்பிறகு இணைந்த தவான் - கோலி ஜோடி, கடைசிவரை பொறுப்பாக ஆடியது. முதல்நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில், 34 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 128 ரன்களை எடுத்தது.

நேற்று தொடர்ந்து ஆடிய தவான் - கோலி இருவரும் சதம் அடித்தனர். இந்திய அணி 117.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 375 ரன்கள் எடுத்து 192 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதனை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 5 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.