Show all

லியாண்டர் பயசின் 101-வது பார்ட்னரானார் ஆண்டி முர்ரே

டென்னிஸ் வீரரான லியாண்டர் பயஸ் (வயது 42) கடந்த 24 வருடங்களாக இந்தியாவிற்காக விளையாடி வருகிறார். இவர் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளில் விளையாடி வருகிறார். 1996-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று அசத்திய பயஸ் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் அடிக்கடி தனது ஜோடியை மாற்றி வருகிறார்.

சமீபத்தில் தனது 100-வது பார்ட்னராக டேனியல் நெஸ்டர் (கனடா) என்பவருடன் இணைந்து ஏப்ரல் மாதம் முதல் விளையாடி வந்தார்.

இந்நிலையில் இங்கிலாந்து நாட்டின் முன்னணி வீரரும், உலகத் தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான ஆண்டி முர்ரேயுடன் இணைந்துள்ளார். இவர் பயசின் 101-வது பார்ட்னர் ஆவார். முர்ரேவுடன் மாண்ட்ரீல் மாஸ்டர் டென்னிஸ் போட்டியில் விளையாடி வருகிறார்.

இன்று நடைபெற்ற முதல் சுற்றில் பயஸ் ஜோடி, ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா)- சார்டி (பிரான்ஸ்) ஜோடியை எதிர்கொண்டது. இதில் பயஸ் ஜோடி 6-3, 6-1 என வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

பயஸ்-நெஸ்டர் ஜோடி 8 தொடர்களில் விளையாடியும் ஒரு போட்டியில்கூட இறுதிச்சுற்றுக்கு முன்னேறவில்லை. எனவே, பயஸ் தனது ஜோடியை மாற்றியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.